விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய சோகம் விலகும் முன்பே மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.