கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் சென்னையில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், இபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர். போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும், அரசியல் தலைவர்களை தாக்கி பேசக்கூடாது உள்ளிட்ட 23 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.