திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுவரை அப்பொறுப்பை டி.ஆர் பாலு வகித்து வந்த நிலையில், அவரது மகன் டி.ஆர்.பி ராஜாவுக்கு தமிழக தொழில் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.
இதனால் நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியும் மக்களவை குழு தலைவராக டி ஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்களவை குழு துணை தலைவராக எம் பி தயாநிதிமாறனும், மக்களவை கொறடாவாக துணைப் பொதுச் செயலாளர் ஆர் ராசா எம்பி நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை குழு தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம் பி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை குழு துணைத் தலைவராக மு.சண்முகம் எம்பியும், மாநிலங்களவை கொறடாவாக வழக்கறிஞர் பி வில்சன் எம்பியும், இரு அவைகளின் பொருளாளராக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ் ஜெகத்ரட்சகன் எம்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்..