திருச்சியில் கலைஞர் பெயரில் உலகத் தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். 2000 ஏக்கரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும்.
ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் அறிவிக்கப்பட்டு நிறைவடையும் வகையில் உள்ளது. ஓசூர் நகரை தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார நகரமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் பெயரில் நூலகம் அறிவியல் மையம் அமைக்கப்படும். கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.