திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து கடலில் குளித்த திருப்பூரைச் சேர்ந்த பழனிசாமி (65) என்பவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். திருப்பூர் கருவூர் கிராமத்தில் புதிதாக கட்டிய கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த 120 பேர் இன்று திருச்செந்தூர் வந்துள்ளனர். பழனிசாமி கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென அலையில் சிக்கி, இழுத்துச் செல்லப்பட்டார். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சடலத்தை மீட்டனர்.