நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும், நடிகை சங்கீதாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், தனக்கு சமைக்க தெரியாது என்பதை திருமணத்திற்கு முன்பே கணவரிடம் கூறிவிட்டதாக சங்கீதா தெரிவித்துள்ளார். வீட்டை நிர்வாகம் செய்யத் தெரியாது எனவும், ஜாலியாக சேர்ந்து ஊர் சுற்றலாம் எனவும் கூறியதற்கு ரெடின் ஓகே சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எது கேட்டாலும் கணவர் இல்லை என சொல்லமாட்டார் எனவும் கூறியுள்ளார்.