அக்டோபர் 30ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி பயணிக்க விருப்பமுள்ளவர்கள் நாளை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 30 பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 2 டிக்கெட் முன்பதிவு செய்யலாம். 80 சதவீத டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் புக்கிங் ஆகின்றன. இதனால் இணையதளத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.