தூத்துக்குடி தருவை மைதானத்தில் வருகின்ற ஜூலை.1 முதல் 5 ஆம் தேதி வரை ராணுவத்தில் சேர்வதற்கான அக்னி வீரர்கள் தேர்வு
நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்த திருச்சி,கரூர்,பெரம்பலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தேர்வில் பங்கேற்க அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.