தெலங்கானா மாநிலங்களவை உறுப்பினர் கேசவ ராவ் (KK) தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். BRS கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இவர், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராகவும் இருந்தார். நேற்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், இன்று எம்பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏற்கெனவே, இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து BRS கட்சியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது