தேனி பழனிசெட்டிப்பட்டி – பூதிப்புரம் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாணவர்களுக்கு இடையூறாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பிரச்சனை தொடர்பாக ஜனவரி மாதம் முதல் 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது தான் கவனத்திற்கு வந்ததாக அறிக்கை தர மாவட்ட மேலாளர் அவகாசம் கோருவது ஏற்கத்தக்கதல்ல என கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மேற்பார்வையாளர், பார் உரிமையாளர், போலீசார் இதுபோல நடந்தது மக்களின் சூழலை பாதித்திருக்கும். தேனி ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், எஸ்பி உதவியுடன் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.