பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம் பிடிக்கும் ஒரே பெண் என்ற சாதனையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். 64 வயதாகும் அவருக்கு இந்த முறையும் முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு அவர் தொழிற்சாலை துறை அமைச்சராகவும், 2017 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார். பின்னர் அவர் 2019 ஆம் ஆண்டு முதல் நிதி துறையை நிர்வகித்து வருகிறார்.