IOB வங்கியில் வாங்கிய ₹180 கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத வாரண்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த வங்கியில் 2007-12இல் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனுக்கு அவர் சென்றுவிட்டார். இதையடுத்து அவர் மீது 2016இல் வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.