திமுக அரசியல் நிர்வாகத் தோல்வியை மறைக்கவே மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவீதமும் 2023 ஆம் ஆண்டு 2.18 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.