மாநில கட்சியாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே எஸ் இளங்கோவன் வாழ்த்து தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி தேசிய கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்று ஆருடம் கூறினார். மேலும் விஜய் கடந்த ஆண்டு வரமாட்டார் என்றார்கள். ஆனால் அவர் தற்போது வந்துவிட்டார். அதேபோல நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் நடிகர் விஜய்.