நடிகர் சூர்யா அரசியலில் குதிப்பாரா என்ற கேள்வியானது எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பல அரசியல் கருத்துக்களை கூறி வந்தார் சூர்யா. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மெளனம் காத்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் கலைத்தார்.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் அரசியல் மாற்றத்தை அவர் முன்னெடுக்க நினைப்பதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். சமீபத்தில் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.