நடிகர் தனுஷ் புதிய படங்களில் கமிட்டாவதற்கு தயாரிப்பாளர் சங்கம் செக் வைத்துள்ளது. தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம்
அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு படங்களை முடித்துக்கொடுக்காமல், மேலும் புதிய தயாரிப்பாளர்களை அணுகுவதாக, சென்னையில் இன்று நடந்த தயாரிப்பாளர் சங்கக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே, புதிய தயாரிப்பாளர்கள் தனுஷை சந்திக்கும் முன், தயாரிப்பாளர் சங்கத்தை அணுகவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.