நடிகரும், பிக்பாஸ் 7 போட்டியாளருமான பிரதீப் ஆண்டனி தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதை எடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பலரது ஆதரவை பெற்ற அவர் சிலர் குற்றச்சாட்டுகளால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.