ஸ்விட்சர்லாந்தில் 77வது லோகார்னோ திரைப்பட விழா ஆகஸ்டு 7 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடிகர் சாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் விழாவில் ஷாருக்கான் நடித்த 2022 ஆம் ஆண்டு வெளியான தேவதாஸ் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதன் பிறகு ரசிகர்களின் கேள்வி மற்றும் பதில் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.