தமிழ் சினிமாவில் அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அதுல்யா ரவி. கோவையில் உள்ள இவருடைய வீட்டில் சமீபத்தில் பாஸ்போர்ட் மற்றும் 2000 ரூபாய் பணம் திருடு போய் உள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வீட்டில் வேலை செய்யும் இரண்டு பணி பெண்கள் சிக்கி உள்ளனர். திருடியதை ஒப்புக்கொண்டு அவர்களிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.