இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் ஒரு பாம்பு கூட இல்லை என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால், அது தான் உண்மை. நாட்டில் பாம்புகள் இல்லாத ஒரே இடம் லட்சத்தீவு. லட்சத்தீவு பாம்புகள் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மற்றொரு விசேஷம் என்னவென்றால், பாம்புகளைத் தவிர நாய்களும் இங்கு காணப்படுவதில்லை. அதாவது பாம்பு மற்றும் நாய் இல்லாத மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி லட்சத்தீவில் காகங்கள் அதிகம்.