வயநாடு பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அந்தகன் பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வளவு ஆறுதல் கூறினாலும் ஈடு செய்ய முடியாது என்றார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை முடிந்த அளவுக்கு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.