மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் 7 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறினார்.