பாபா விஸ்வநாத், கங்கா தேவி, காசி மக்களின் அன்பால், தான் 3ஆவது முறையாக நாட்டின் தலைமை சேவகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் பேசிய அவர், வரலாற்று வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றில் எழுதப்பட்டிருப்பதாகவும், ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி 3ஆவது முறையாக தேர்வாவது அரிதானது என்றார்.