கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன்-2’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2:38 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், Anti-Indian போன்ற சமகால அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, “நடப்பது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். ஊழலுக்கு எதிரான போரில் நீங்கள் காந்தி வழியில், நான் நேதாஜி வழியில்” என காந்தியவாதியான கமல் சொல்லும் டயலாக் பேசு பொருளாகியுள்ளது.