கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் திருச்சி சிவா எம்பி பேசியுள்ளார். அப்போது, வயநாடு நிலச்சரிவுக்கு காடுகள் அழிப்புதான் காரணம். காடுகளை அழிப்பதை உடனடியாக நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல மலைப்பகுதிகள் முழுமையாக மொட்டை அடிக்கப்பட்டதுபோல் மாறி இருக்கிறது என்று தெரிவித்தார்.