நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் மையங்கள் பிரபலம். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு பயிற்சி பெற்று வந்த பீகாரை சேர்ந்த 17 வயது மாணவன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 2015 முதல் கோட்டாவில் பயிற்சி பெற்ற மாணவர்களில் இதுவரை 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.