நீட் தேர்வு என்பது ஊழல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு, தேர்வுத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு மாணவரை தேர்ந்தெடுக்க, சுயமாக தேர்வு நடத்தும் உரிமை மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.