முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் 2 மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும் என்று தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. மே மாதம் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்த பின்னர் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை முறியடிப்பதற்காக தேர்வு நடைபெறுவதற்கு 2 மணி நேரம் முன் வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசும் தேர்வு முகாமையும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.