நீட் தேர்வுக்கு எதிராக ஜூலை 3 நாளை திமுக மாணவர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் நாளை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக ஜூன் 24ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி விவகாரம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.