தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் விழாவில் பேசிய விஜய், நீட் தேர்வால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அதனை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்று தெரிவித்துள்ளார். மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இவற்றையெல்லாம் நான் பரிந்துரை மட்டுமே செய்கின்றேன் என்றார். இவையெல்லாம் உடனே நடக்க வாய்ப்பில்லை. நடக்கவும் விட மாட்டார்கள் என்று அழுத்தமாக பேசி அரசியல் பஞ்ச் கொடுத்துள்ளார்.