நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்த போது திமுக ஏன் எதிர்க்கவில்லை என அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், தங்களின் லாபத்துக்காக திமுகவும், காங்கிரஸ் கட்சியும் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். தம்பிதுரையின் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் சில நிமிடங்கள் கூச்சல், குழப்பம் நிலவியது.