நீட் முறைகேட்டை கண்டித்து ஜூன் 24ஆம் தேதி இளைஞரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவை இல்லை என நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியும் நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய குளறுபடி மற்றும் மோசடிகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.