நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன், கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.140, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், விவசாயிகளிடம் இருந்து சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,405, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு செப்.1 முதல் அமலுக்கு வருகிறது.