நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இதில், 18 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டபோது, ஓடுதளத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.