சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை மாநகர் பரபரப்பாக காணப்படுகிறது