நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு நேற்று விருந்து வைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் பேசிய அவர், அடுத்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் வர சொல்லி இருப்பதாகவும், திரும்பவும் பக்கெட் பிரியாணி சாப்பிட நேரம் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். கைதி 2 குறித்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சர்தார் 2வும் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.