மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. மேலும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகண்டில் காங்கிரசும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகிக்கிறது. தமிழகம் உள்ளிட்ட 7 மாநில இடைத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் . – 5, திரிணாமுல் காங்கிரஸ் . – 4, பா.ஜ.க., தி.மு.க, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் தலா 1 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.