நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொள்வதால் அவர் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. ஆளுநரே பல்கலைக்கழகங்களில் வேந்தராக உள்ளதால் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அவரே முடிவு எடுக்கிறார். இதனால் ஆளுநர் பங்கேற்கும் பட்டம் அடைப்பு நிகழ்வுகளை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து வருகிறார்.