கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை 52 பேர் பலியாகி இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் பலியாகினர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாண சுந்தரம் உள்பட 3 பேர் இரவில் உயிரிழந்தனர். சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது,