மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.