பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் திமுக மீதும் அரசியல் தலைவர்கள் மீதும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எனக்கு பா.ரஞ்சித் யாரென்று தெரியவில்லை. அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.