இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்தாண்டு சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய வீரர்கள் பங்கேற்கப் போவதில்லை என்று பிசிசிஐ முடிவெடுத்திருக்கும் நிலையில் ஹர்பஜன் அதை ஆமோதித்துள்ளார். வீரர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்