சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியான நவமணி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலை குறித்து அவர் எழுதிய கடிதத்தில், பாஜக மாவட்ட செயலாளர் செந்தில் 2.5 லட்சம் பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் செந்திலை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.