பாஜகவின் செயல்பாடுகள் சர்வாதிகாரம்: ஆ.ராசா மத்திய அரசு பாசிச கொள்கையை பின்பற்றுவதாக திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையினரை பாஜக நசுக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவசர நிலையை தற்போதைய பாஜக அரசின் செயல்பாடுகளுடன் ஒப்பிட முடியாது எனவும், பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.