ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாஜகவுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் பேச வேண்டும் என்றால் சந்துரு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம் என்று கூறியுள்ள அவர், சுயலாபத்துக்காக, திமுக அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு பாஜகவை விமர்சிக்க கூடாது என்றார். அறநெறி குறித்து பாஜகவுக்கு என்ன தெரியும் என்று நீதிபதி சந்துரு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.