இந்தியாவின் பாதுகாப்பு துறை உற்பத்தி குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் X தள பதிவில், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி 2023-24 ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், அதன் மதிப்பு கடந்த நிதியாண்டில் 1.2 லட்சம் கோடியை எட்டி உள்ளதாகவும், இது முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பை விட 16.8 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.