தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் சோதனை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள கடைகளில் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் பானிபூறியின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.