பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ்கார்ட்னில் வில்வித்தை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் இந்திய அணி வீராங்கனைகள் தடுமாறினர். இருப்பினும், கடைசியில் சிறப்பாக விளையாடிய தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி 1,983 புள்ளிகளுடன் 4ஆம் இடம் பிடித்துள்ளது.