தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற 2,860 வீரர்களுக்கு ரூ.102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 16 வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர் என்றார். அத்துடன், அவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார்.