பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் பதினொன்னாம் தேதி வரை ஒலிம்பிக் நடைபெற உள்ளது. டிக்கெட் விற்பனை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் 86 லட்சம் டிக்கெட்டுகள் இதுவரை விற்பனையாகியுள்ளது. 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸிற்கு 83 லட்சம் டிக்கெட் விற்கப்பட்டது சாதனையாக தெரிந்தது. அதனை பாரிஸ் ஒலிம்பிக் டிக்கெட் விற்பனை விஞ்சி புதிய சாதனை படைத்துள்ளதாக பாரிஸ் போட்டி ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.